போதை பொருள் தடுப்பு பள்ளியில் விழிப்புணர்வு
அரூர், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை உறுதிமொழி வாசிக்க, போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.