கோவில் கருவறையில் ஆண் சிசு மீட்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேட்டியம்பட்டி அடுத்த ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகில், கந்தல பெரியப்பன் கோவில் கருவறையில், நேற்று காலை குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.அவ்வழியே சென்ற ராஜசேகர், கருவறைக்கு சென்று பார்த்த போது, பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு இருந்ததை பார்த்தார். உடனே, குழந்தையை மீட்டு பசும்பால் கொடுத்து உள்ளனர்.வி.ஏ.ஓ., மற்றும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடம் சென்று, குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.