ரூ.2.62 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 5 வார்டுகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 91 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது.கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவரது சொந்த நிதியில், அப்பாசாமி நாயுடு தெரு உள்பட மூன்று இடங்களில், 2.5 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி, சரவணன், வர்த்தகர் அணி மாநில துணை செயலர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக, பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளான பெருகோபனப்பள்ளி பஞ்.,ல், 53.92 லட்சம் ரூபாய், ஜெகதேவி பஞ்.,ல், 56.60 லட்சம் ரூபாய், அஞ்சூர் பஞ்.,ல், 60.75 லட்சம் ரூபாய், கிராம மறுமலர்ச்சி திட்டத்தில், 1.71 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களுக்கு மதியழகன் எம்.எல்.ஏ, பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.