உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மீது பைக் மோதல்; வாலிபர் உயிரிழப்பு

கார் மீது பைக் மோதல்; வாலிபர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள களத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன், 32. ஓசூரில் இன்ஜினியரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 16 இரவு, 7:50 மணிக்கு, திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில், யமாஹா எப்.இசட் பைக்கில், ஓசூர் நோக்கி சென்றார்.அப்போது முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால், கட்டுப்பாட்டை இழந்த ஜெகன் நிலை தடுமாறி, காரின் பின்புறம் பைக்கில் மோதினார். இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜெகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி