பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஓசூர்,:காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆப்ரேஷன் சிந்துார்' என்ற பெயரில், இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.அதற்கு வரவேற்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிழக்கு மண்டல பா.ஜ., சார்பில், எம்.ஜி., ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே, முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் மற்றும் கிழக்கு மண்டல தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில், நேற்று மாலை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வரலட்சுமி, ராஜசேகர், இளைஞரணி முன்னாள் மாநில செயலாளர் கிரண், மண்டல துணைத்தலைவர்கள் பிரதீப்குமார், சீனிவாசன், பொதுச்செயலாளர் வெங்கடேசலு, மகளிரணி மாவட்ட முன்னாள் தலைவி மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர்.