உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்டவாளத்தில் வீசப்பட்ட சூளகிரி தொழிலாளி உடல்

தண்டவாளத்தில் வீசப்பட்ட சூளகிரி தொழிலாளி உடல்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னார் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன், 24. பிப்., 19 மதியம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் மணிமேகலை புகார் படி, சூளகிரி போலீசார் தேடினர்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன்பு, ரயில்வே தண்டவாளத்தில், வாலிபர் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். வாலிபரை கத்தியால் குத்திக் கொன்று, தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிந்தது.விசாரணையில், அது லோகநாதன் என தெரிந்தது. சூளகிரி ஸ்டேஷனுக்கு கர்நாடகா ரயில்வே போலீசார் வந்து விசாரித்தனர். கர்நாடகாவில் அவரை மர்ம கும்பல் கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை