உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

 பைக் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: பைக் மீது பஸ் மோதியதில், இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வன்னியபுரத்தில், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், தொழிலாளர்கள் பணி முடிந்து நிறுவன பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ராயக்கோட்டை வழியாக பஸ் சென்றபோது, இரவு, 11:45 மணியளவில், பாலக்குறி அருகே ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில், எதிரே வந்த, 'அப்பாச்சி' பைக்கில், பஸ் மோதியது. இதில் பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான நவீன், 23, சசி, 23, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அங்கு வந்த அவர்களின் உறவினர்கள், பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள இரு வாலிபர்களின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் சமாதான பேச்சு நடத்தி, கலைந்து போக செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை