உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருமாம்பட்டியில் கன்று விடும் விழா

எருமாம்பட்டியில் கன்று விடும் விழா

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், வேலம்பட்டி அடுத்த, எருமாம்பட்டி கிராமத்தில், மாரியம்மன், கொல்லாபுரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட கன்றுகளை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு, முதல் பரிசாக எருமாம்பட்டி ஊர்மக்கள் சார்பாக, 50,000 ரூபாய், 2ம் பரிசாக 35,000 ரூபாய், 3ம் பரிசாக 25,000 ரூபாய் என, 101 பரிசுகளுக்கு மேல் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவை காண 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். நாகரசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை