உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்

அடையாள அட்டைக்காக விவசாயிகளுக்கு முகாம்

சென்னிமலை: சென்னிமலை வட்டாரத்தில், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், கிராமங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.சென்னிமலை வட்டாரத்தில், 22 ஊராட்சிகளிலும் பார்மர்ஸ் ரெஜிஸ்டரி செயலியில், விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு, 21 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். வரும் காலங்களில், அரசின் மானியத்திட்டங்களை பெற, இந்த எண் பயனுள்ளதாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு வேளாண், தோட்டக்கலைத்-துறை அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம். இத்தகவலை சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை