உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் துறை வேலைவாய்ப்பு 19ல் கிருஷ்ணகிரியில் முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு 19ல் கிருஷ்ணகிரியில் முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு19ல் கிருஷ்ணகிரியில் முகாம்கிருஷ்ணகிரி, அக். 17- கிருஷ்ணகிரியில் வரும், 19ல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வரும், 19ல் (சனிக்கிழமை) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நடக்கும் இம் முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்களான அசோக் லேலண்ட், டெல்டா, டி.வி.எஸ்., உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு, 5,000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இதில், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல், பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கணினி இயக்குபவர்கள் உட்பட அனைத்து வித கல்வி தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும், முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது, 04343 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி