உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு காப்பு

கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு காப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புதிய வசந்த் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 45. விவசாயி; இவரும், அலசநத்தம் சாலையிலுள்ள பிஸ்மில்லா நகரை சேர்ந்த சிமென்ட் கடை நடத்தி வரும் குமரேசன், 50, என்பவரும் நண்பர்கள். முன்விரோதம் காரணமாக கடந்த, 28ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, போதையில் இருந்த குமரேசன், தன் நண்பர்களுடன் நந்தகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, இன்னோவா காரின் பின்புற கண்ணாடியை சேதப்படுத்தினார். மேலும், வீட்டிலிருந்த நந்தகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டினார். நந்தகுமார் புகார் படி, குமரேசனை ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ