அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணகுமார், 50. இவர், ஆபாசமாக பேசியதாக கூறி, 10ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் சக மாணவ - மாணவியரிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விசாரித்தனர். துறையின் அதிகாரி ரகுராமன், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். அதில், மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, போக்சோ சட்டத்தில், ஆசிரியர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிந்து, புகாரின் உண்மை தன்மை குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.