உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வி.ஏ.ஓ.,வை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு

வி.ஏ.ஓ.,வை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு

தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கெம்பத்பள்ளி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த இரு புங்கன் மரங்களை கடந்த, 1 ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மர்ம நபர் வெட்டி விற்பனை செய்தார். இதையறிந்த பள்ளப்பள்ளி வி.ஏ.ஓ., அம்ரேஷ், சம்பவ இடத்திற்கு சென்று மரம் வெட்டிய பென்னங்கூரை சேர்ந்த வின்சென்ட், 42, என்பவரிடம் கேள்வி எழுப்பினார். அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வி.ஏ.ஓ.,வை திட்டிய வின்சென்ட், அவரது பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். வி.ஏ.ஓ., அம்ரேஷ் கொடுத்த புகார்படி, மரத்தை வெட்டிய வின்சென்ட், 42, அதை விலைக்கு வாங்கிய அதே பகுதியை சேர்ந்த அக்குலு, 45, ஆகிய இருவர் மீது, தளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ