எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
கந்திக்குப்பம்: பர்கூர் அடுத்த கந்திக்குப்பம் அருகே பாலிநாயனப்பள்ளி கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக, அப்பகுதி வி.ஏ.ஓ., முத்தம்மாள், கந்திக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், 40, மாதேஷ், 38, சரவணகுமார், 35, தம்பிதுரை, 36, ராஜா, 50, ஆகிய, 5 பேர் மீது வழக்குப்ப-திந்து போலீசார் விசாரிக்கின்றனர்.