உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 20 துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை

20 துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளிபுதுாரில் அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு பொது வினியோக திட்டத்திற்கு, நெல் அரவை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு கலெக்டர் தினேஷ்குமார் நேற்று சென்று, நெல் வரத்து, அரவை பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஹள்ளிபுதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பன்னிஹள்ளி, கரடிஹள்ளி ஆகிய பஞ்.,களுக்கு நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, பயனாளி ஒருவருக்கு ரேஷன் கார்டில் பெயர் மாற்றத்திற்கான ஆணையையும், 20 துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளர் தணிகாசலம், உதவி மேலாளர்கள் வில்சன் (தரக்கட்டுப்பாடு), சசிக்குமார் (வாணிபம்), தனி தாசில்தார் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை