உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெந்நீர் கொட்டி குழந்தை பலி

வெந்நீர் கொட்டி குழந்தை பலி

ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32. டிரைவர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் நகர் விகாஸ் நகர் லேக் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். இவருக்கு, இரண்டரை வயதில் பைரவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த, 31ம் தேதி காலை, 7:40 மணிக்கு, வீட்டு குளியலறையில் இருந்த வெந்நீர் குழந்தை மீது கொட்டியது.இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை பைரவன், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !