உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, நாரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் மணி. இவரது மகன் தர்ஷன், 3, காலை, 11:00 மணியளவில் விளையாடி கொண்டிருந்தான். அப்‍போது, வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி மூடி திறந்த நிலையில் இருந்துள்ளது. இதில் குழந்தை தவறி விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு, சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மேல் சிகிச்சைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை