பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாக வழிபாடு
ஓசூர், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வண மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் இரவு மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. முன்னதாக, ராகு, கேது மற்றும்மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, யாக குண்டத்தில் வேள்வி தீயை வளர்த்து, மிளகாய் வத்தல் யாகம் துவங்கியது. ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், மிளகாய் வத்தலை தலையை சுற்றி திருஷ்டியை கழித்து, யாக குண்டத்தில் போட்டனர். பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமண தடை விலக, பக்தர்கள் பிரத்யங்கிரா தேவியை வழிபட்டனர்.