பட்டாசு வெடித்ததால் மோதல்; 8 பேர் கைது
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சின்ராஜ், 67. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 60. கடந்த, 21ல், தீபாவளி பண்டிகையையொட்டி, சின்ராஜ் வீட்டில் பட்டாசு வெடித்துள்ளனர். அந்த வழியாக முருகன், தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, பட்டாசு வெடிக்க வேண்டாம் எனக்கூறிய முருகனுக்கும், சின்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இதுகுறித்து புகார்படி, முருகன், அவரது மகன்கள் புஷ்பராஜ், 29, முரளி, 24, கலையரசி, 30, மற்றும் சின்ராஜ், அவரது மகன் வடிவேல், 30, மனைவி லட்சுமி, 60, மருமகள் சிவசக்தி, 25, ஆகிய எட்டு பேரை, நேற்று முன்தினம் பர்கூர் போலீசார் கைது செய்தனர்.