மாணவ, மாணவியருக்கான போட்டிகள் 21ல் துவக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் வரும், 21 மற்றும் 22ல் நடக்கிறது.இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும், 21ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்-கான போட்டிகள் வரும், 22ல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியிலும் நடக்கிறது.கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக தலா, 10,000 ரூபாய், 2ம் பரி-சாக, 7,000 ரூபாய், 3ம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு பள்ளி, கல்லுாரியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம், மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து, உரிய படி-வத்துடன் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர் அனுப்ப வேண்டும். இதில், மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.