காதல் திருமணத்தால் மோதல்
கிருஷ்ணகிரி, சாமல்பட்டி அடுத்த ராமகிருஷ்ணபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 45. இவரது மகன் சூர்யா,20, பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்த சகுந்தலா, 40, மகளை காதலித்து கடந்த ஏப்.,30ல், திருமணம் செய்தார். சகுந்தலா தரப்பிற்கு உடன்பாடு இல்லை. நேற்று முன்தினம் சகுந்தலா தரப்பை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு ஜன்னலை உடைத்து அங்கு இருந்த ஆறுமுகத்தின் உறவினர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகார்படி சாமல்பட்டி போலீசார், சகுந்தலா, வாணி, 42, உமாராணி, 45, சரத்குமார், 20, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.