உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் தவறான கி.மீ., துார அளவால் குழப்பம்

நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் தவறான கி.மீ., துார அளவால் குழப்பம்

சூளகிரி, பேரிகை அருகே, நெடுஞ்சாலைத்துறையின் கி.மீ., குறிப்பிடும் பெயர் பலகையில், ஒரே இடத்திற்கு வெவ்வேறு கி.மீ., என குறிப்பிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகையில் இருந்து வேப்பனஹள்ளி செல்லும் சாலையில் நேரலகிரி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகே, கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்., செல்வதற்கு மாநில நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இந்த இடத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், கே.ஜி.எப்., 18 கி.மீ., என சாலையின் இருபுறமும் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று துாரத்தில் கே.ஜி.எப்., 38 கி.மீ., என மற்றொரு போர்டு வைக்கப்பட்டுள்ளன.நேரலகிரியில் இருந்து, கே.ஜி.எப்., 38 கி.மீ., தொலைவில் தான் அமைந்துள்ளது. ஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 18 கி.மீ., என, இரு இடங்களில் போர்டு வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர். குறைந்த துாரம் என நினைத்து, கே.ஜி.எப்., நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், நீண்ட துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.எனவே, வாகன ஓட்டிகளை குழப்பும் வகையில், 18 கி.மீ., என வைக்கப்பட்டுள்ள இரு தவறான போர்டுகளை உடனடியாக, 38 கி.மீ., என திருத்தம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி