உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்பேத்கர் படம் மீது மாட்டு சாணம் வீச்சு

அம்பேத்கர் படம் மீது மாட்டு சாணம் வீச்சு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த நெரிகம் அருகே குள்ளு கிராமத்தில், சுவற்றில் அம்பேத்கர் உருவப்படம் வரையப்-பட்டுள்ளது. இதன் மீது யாரோ மாட்டு சாணத்தை வீசியுள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து, 100க்கும் மேற்-பட்டோர் பேரிகை போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாட்டு சாணத்தை பூசியவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, அம்பேத்கர் மீது பூசியிருந்த மாட்டு சாணத்தை சுத்தம் செய்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை