உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சப்ளம்மா தேவி கோவிலில் மாடுகள் திருவிழா துவக்கம்

சப்ளம்மா தேவி கோவிலில் மாடுகள் திருவிழா துவக்கம்

ஓசூர்: ஓசூர் அருகே, 200 ஆண்டுகள் பழமையான திம்மசந்திரம், சப்ளம்மா தேவி கோவிலில், மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த திம்மசந்திரத்தில் சப்ளம்மா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா கொண்டாடப்படும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக தை மாத இறுதி வாரத்தில் நடக்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லி கட்டு காளைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த மாடுகளை வாங்க பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருவதுடன், பல கோடி ரூபாய்க்கு வியாபாரமும் நடக்கும்.இந்த ஆண்டுக்கான மாடுகள் திருவிழா, நேற்று துவங்கியதால், சப்ளம்மா தேவிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வரும் பிப்.,3 வரை தொடர்ந்து, 7 நாட்கள் திருவிழா நடக்கும். சப்ளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன் கிருஷ்ணப்பா, சிவா நந்தன், ராஜரெட்டி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை