மேலும் செய்திகள்
கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி
08-Oct-2024
கிரஷர் தொழிலாளி மர்ம சாவுஓசூர், அக். 11-அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக், 32. இவர், கடந்த, 2 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே வெங்கடேஷ்புரம் அருகே பெக்கிலி கிராமத்திலுள்ள மூர்த்தி என்பவரது கிரஷரில் பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் அப்பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் அனைவரும் துாங்கச் சென்று விட்டனர். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்ல, வெளியில் படுத்திருந்த அசோக்கை எழுப்பினர். ஆனால் அவர், மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். உடலில் எங்கும் வெளிக்காயம் இல்லை. பேரிகை போலீசார், அவரது சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
08-Oct-2024