உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவன் சடலத்தை தோண்டி எடுக்க முடிவு

வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவன் சடலத்தை தோண்டி எடுக்க முடிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மஞ்சுநாதா லே அவுட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஜெஸ்டின் யெனோக், 12. மத்தம் அக்ரஹாரம் அரசு பள்ளியில், 6 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம், 18 மாலை வலிப்பு நோயால் வீட்டில் உயி-ரிழந்தார். இதனால் பெற்றோர், சொந்த ஊரான சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே, தண்ணீர் குட்டப்பட்டி கிராமத்தில் மாணவன் உடலை அடக்கம் செய்தனர்.இத்தகவலை போலீசாருக்கு தெரிவிக்கவில்லை எனக்கூறி, 1098 'சைல்ட் ஹெல்ப் லைன்'னில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் தகவலின் படி, மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., மகேஸ்வரி, ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார், தாசில்தாருக்கு கடிதம் வழங்கி, மாணவன் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை