உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அர்ப்பணிப்பு விழா

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் அர்ப்பணிப்பு விழா

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரியில்முதலாமாண்டு மாணவர்கள் அர்ப்பணிப்பு விழாஓசூர், நவ. 24-ஓசூர், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2024-25ம் கல்வியாண்டில் படிக்கும், 150 இளங்கலை மருத்துவ மாணவ, மாணவியர், வெள்ளை அங்கி அணிந்து மருத்துவத்துறையில் தங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா முத்தையா மற்றும் துணை முதல்வர் ஆனந்த ரெட்டி, கண்காணிப்பாளர் கிரிஷ் ஓங்கள், இருப்பிட மருத்துவர் பார்வதி தலைமை வகித்தனர். கல்லுாரி அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெயசங்கரன், கல்லுாரி நிறுவனர் தம்பிதுரை எம்.பி., ஆகியோர், மருத்துவ மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி வழங்கினர்.மேலும் கல்வியிலும், விளையாட்டிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் மால்முருகன், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி இயக்குனர் ரங்கநாதன். முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் வாழும் வாழ்க்கை கல்வியின் முதன்மை செயல் அலுவலர் கண்ணன் கிரீஸ் ஆகியோர், மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினர். வேளாங்கண்ணி பள்ளி குழும தாளாளர் கூத்தரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை