மேலும் செய்திகள்
ஊத்தங்கரை அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
04-Feb-2025
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளியில், ஆண்டுதோறும் தை மாதம் தேவாதியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில், பல்வேறு கிராமங்களில் வசிக்கும், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு தேவாதியம்மன் திருவிழா படப்பள்ளியில் நடந்தது. தோட்டத்திலுள்ள ஆவார செடியின் கீழே சிறப்பு பூஜை செய்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில், படப்பள்ளி மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் திரளாக கலந்து கொண்டு, குடும்ப நலம், ஊர் நலம், தொழில் மேம்பாடு, மழைவளம், அமைதி ஆகியவற்றை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, 24 ஆடுகள் பலியிட்டு தேவாதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் மொத்தமாக பலியிடப்பட்ட ஆடுகளின் கறி வெட்டப்பட்டு, குடும்பங்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு ஊர் செட்டியார் குப்புசாமி, சங்கோதி செட்டியார், ராஜரத்தினம், மனேகரா செட்டியார், வெங்கடேசன், பூசாரி மனோகரன் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
04-Feb-2025