/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாற்றில் துணி கழிவுகளால் பக்தர்கள் வேதனை
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாற்றில் துணி கழிவுகளால் பக்தர்கள் வேதனை
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாற்றில் துணி கழிவுகளால் பக்தர்கள் வேதனைஊத்தங்கரை, நவ. 20-ஊத்தங்கரையை அடுத்த, அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாறு கரையோரம், அனுமந்தீஸ்வரர் கோவில் உள்ளது.நாள்தோறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி அனுமனை தரிசனம் செய்து செல்கின்றனர். தென்பெண்ணையாற்றில் குளிக்கும் பக்தர்கள் தங்களது ஆடைகளை அங்கேயே கழட்டி விடுகின்றனர்.இதனால் துணிகள் ஆற்றின் கரையோரத்தில் குவிந்து கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருவதாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த திருத்தலம், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றி, துாய்மையாக வைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.