உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / "கிரைம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்ஸ் :எல்லையோர போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கல்

"கிரைம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்ஸ் :எல்லையோர போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கல்

ஓசூர்: தமிழக, கர்நாடகா எல்லையோர போலீஸ் ஸ்டேஷன்களில் குற்றவழக்குகளில் உடனடியாக துப்பு துலங்க வசதியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'கிரைம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்ஸ்' தடய அறிவியல், கைரேகை பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 30 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் குறிப்பாக கர்நாடகா, தமிழக எல்லையில் உள்ள ஓசூர் சப்-டிவிஷனில் ஓசூர் டவுன், ஹட்கோ, சிப்காட், மத்திகிரி, பேரிகை, பாகலூர் மற்றும் சூளகிரி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும், தேன்கனிக்கோட்டை சப்-டிவிஷனில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் குற் றவழக்களில் போலீஸார் உடனடியாக துப்பு துலங்க தேவையான தடய அறிவியல், கைரேகை சாதன கருவிகள் இல்லாமல் இருந்தது. அதனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் போலீஸார், மாவட்ட கைரேகை நிபுனர்கள், தடய அறிவியல் ஆய்வாளர்களை வரவழைத்து சோதனை நடத்த வேண்டிய இருந்தது. அதற்குள் தடயங்கள் அழிந்துவிடுவதால் போலீஸாரால் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு மாநில எல்லையோர மாவட்ட காவல் துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களை ஹெவி, மீடியம் மற்றும் லைட் என தரம் பிரித்து கூடுதல் போலீஸாரை நியமித்தும், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற சம்பவங்கள் நடந்தவுடன் போலீஸார் அச்சம்பவங்களில் உடனடியாக துப்பு துலங்க குற்றவாளிகளை விட்டு சென்ற தடயங்கள், அவர்களுடைய கைரேகைகளை பதிவு செய்வதற்கு தேவையான 'கிரேம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்ஸ்' வழங்கப்பட்டுள்ளது. இந்த கிட் பாக்ஸ் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. இதில், வெப் கேமரா, ஹெட் லைட், கைரேகை பதிவுகளை பதிவு செய்யும் கருவி உள்ளிட்ட பல்வேறு வகை நவீன துப்பு துலங்கும் கருவிகள் அடங்கியுள்ளது. கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடந்தவுடன் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீஸார், இந்த கிரைம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்ஸ்களை எடுத்து கொண்டு சென்று குற்றவாளிகளுடைய தடயங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை சப்-டிவிஷன் போலீஸ் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்களுக்கு, இந்த கிரைம் இன்வஸ்டிகேஷன் கிட் பாக்சில் உள்ள தடய அறிவியல், கைரேகை பதிவு கருவிகளை கையாளும் முறைகள் குறித்து நேற்று ஓசூர் ஆர்.கே., மஹாலில் நடந்தது.மாவட்ட கைரேகை பிரிவு டி.எஸ்.பி., பெருமாள், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, தடய அறிவியல் பிரிவு உதவி இயக்குனர் சந்திர சேகர் ஆகியோர் கிட் பாக்ஸ் கருவிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் யுக்திகள் குறித்து செயல்முறை பயிற்சி விளக்கம் செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ