| ADDED : ஆக 26, 2011 01:06 AM
ஓசூர்: ஓசூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பேரணி நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் துவக்கி
வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சம்பத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பேரணி வட்டார வளமையத்தில் துவங்கி
உழவர்சந்தை, தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும்
வட்டார வள மையத்தை வந்தடைந்தது. பேரணியில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ,
மாணவிகள், பெற்றோர், சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வ உறுப்பினர்கள்
பாஸ்கரன், பரமேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து
கொண்டனர். தொடர்ந்து, வட்டார வள மையத்தில் பெற்றோருக்கான முகாம் நடந்தது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை
பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சிறப்பு ஆசிரியர்கள்
ராஜேஷ், ஹேமலதா, கனகவள்ளி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும்
திட்டங்களையும், ஊனம் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள்
குறித்து பேசினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் மல்லிகா நன்றி கூறினார். பேரணி
மற்றம் முகாம் ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை
செய்தது.