மேலும் செய்திகள்
காஞ்சியில் தடகள போட்டி
18-Aug-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதகொண்டப்பள்ளியில், 22வது மாவட்ட இளையோர் தடகள 'சாம்பியன் ஷிப்' போட்டிகள் நடக்க உள்ளது.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தலைவர் மதிய-ழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், 22வது மாவட்ட இளையோர் தடகள 'சாம்பியன் ஷிப்' போட்டி வரும், 24ல், ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் நடக்க உள்ளது. இதில், 14, 16, 18 மற்றும், 20 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கலாம். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடக்கிறது. நுழைவு கட்டணமாக ஒரு போட்டிக்கு, 150 ரூபாய் என போட்டி நடக்கும் நாளில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பங்கு பெறும் மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் நகல் கொண்டுவர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 99445 20667, 94863 53643 ஆகிய எண்களில் தொடர்பு கொள்-ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
18-Aug-2025