உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.30 கோடி வரியிழப்பு மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ஓசூர் மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.30 கோடி வரியிழப்பு மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ஓசூர் மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.30 கோடி வரியிழப்புமாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டுஓசூர், நவ. 22-ஓசூர் மாநகராட்சியில் ஆண்டுதோறும், 30 கோடி ரூபாய்க்கு வரியிழப்பு ஏற்படுவதாக மாநகராட்சி, தி.மு.க., கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சத்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன்: ஓசூர் சிப்காட், ஆவணங்கள் படி இன்னும் குடியிருப்பு பகுதியாகவே காட்டப்பட்டு வருகிறது. அதை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு, 30 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு மாநகராட்சி சிறப்பு வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் மட்டுமே காரணம். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர், பஸ் ஸ்டாண்டுக்கு ஆண்டுதோறும் ஆர்.டி.ஓ.,விடம் வாங்கப்படும் தகுதி சான்றிதழும் வாங்காததால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மலைகோவில் டெலஸ்கோப், பூங்கா ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன்: ராமநாயக்கன் ஏரியில் தனியார் மருத்துவமனையின் கழிவுநீர் கலப்பதாக நீண்டகாலமாக புகாரளித்து வருகிறேன். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல சாக்கடை கால்வாய், சாலைவசதி, தெருநாய்கள் தொல்லை குறித்து கவுன்சிலர்கள், சென்னீரப்பா, ஸ்ரீதரன், அசோகா, சசிதேவ், சிவ ராம், மாரக்கா, இந்திராணி உள்ளிட்டோர் பேசினர்.ஓசூர், தி.மு.க., -எம்.எல்.ஏ., பிரகாஷ் பதிலளித்து பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில், 8,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விரிவாக்க திட்டப்பணிகளை துவக்கி வைக்க உள்ளார். தற்போது ஓசூர் மாநகராட்சியில், 13 எம்.எல்.டி., குடிநீர் வினியோகிக்கும் நிலையில், திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தாராளமாக கிடைக்கும். மாநகராட்சி உட்பட அனைத்து பகுதியிலும் பட்டா கேட்டு காத்திருக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும். சாக்கடை கால்வாய், சாலை பணிகளுக்கு, தேவையான நிதியை, தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். எந்தெந்த பகுதிகளில் இது தேவைப்படுகிறதோ, அதை முடித்த பின்னர் தான், தேர்தல் பணிகளை, தி.மு.க., துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, ஓசூர், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக கடை வைத்துள்ளவர்கள், புதிதாக கட்டப்படும் கடைகளில் தங்களுக்கும் இடம் ஒதுக்க கோரி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ