ஓசூரில் தி.மு.க., செயற்குழு
ஓசூரில் தி.மு.க., செயற்குழுஓசூர், அக். 16-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓசூர், தளி சாலையிலுள்ள சென்னீஸ் மகாலில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கியும் பேசினார்.கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், 3 மாதங்களுக்குள் சிலை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர்கள் திம்மராஜ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.