உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ. 12-கிருஷ்ணகிரி, தி.மு.க., நகரம் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் தலைமை வகித்தனர். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலை வகித்தார்.திருப்பத்துார் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளரும், கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளருமான தேவகுமார், வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றிக்கு பாடுபட கேட்டுக்‍கொண்டார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை