மேலும் செய்திகள்
பா.ஜ., முகவர்களுக்கு பயிற்சி முகாம்
10-Nov-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, தி.மு.க., தெற்கு ஒன்றியம் மற்றும் நகர ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், பேரூராட்சி மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் தீபக், பொறியாளர் அணி காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓட்டுச்சாவடி முகவர்கள் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை உரிய வாக்காளர்களிடம் சேர்த்தல், படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது குறித்து முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய, நகர ஓட்டுச்சாவடி முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
10-Nov-2025