உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாஜி நிர்வாகி பேச முயன்றதால் கூச்சல், குழப்பம்தள்ளுமுள்ளுவால் பாதியில் முடிந்த தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மாஜி நிர்வாகி பேச முயன்றதால் கூச்சல், குழப்பம்தள்ளுமுள்ளுவால் பாதியில் முடிந்த தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மாஜி நிர்வாகி பேச முயன்றதால் கூச்சல், குழப்பம்தள்ளுமுள்ளுவால் பாதியில் முடிந்த தி.மு.க., ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த, தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் பேச முயன்றதால் ஏற்பட்ட சலசலப்பில், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆர்ப்பாட்டம் பாதியிலேயே முடிந்தது.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று, தமிழக கவர்னரை கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர் கோவிந்தசாமி, நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அமைப்புசாரா ஓட்டுனரணியின் மாநில செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன், முன்னாள் எம்.பி., சுகவனம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்ட பின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், தி.மு.க., தலைமை பேச்சாளருமான லயோலா ராஜசேகர், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் ஆகியோர் பேசினர்.அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளிட்டோரையும் பேச வையுங்கள் எனக்கூறிய முன்னாள் எம்.பி., சுகவனத்திடம், மைக் கொடுக்கப்பட்டது. அவர், 'முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் பேசுவார்' எனக்கூறி மைக்கை அவரிடம் கொடுத்தார். அப்போது, செங்குட்டுவன் பேசுவதை கேட்க சிலர் கைதட்டியும், சிலர் பேசவேண்டாம் எனக்கூறியும் கூச்சலிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன், தி.மு.க., நிகழ்ச்சியில் பேசிய செங்குட்டுவன், 'தி.மு.க.,வினர் இல்லீகல் செயலிலும் ஈடுபடுவர். அப்படி செய்தால், அவர்களை விட்டு விடுவீர்களா' என பேசினார். இந்த பேச்சுக்கு பின் அவரை, மேடைகளில் பேச மாவட்ட, தி.மு.க.,வினர் அனுமதிக்கவில்லை.நேற்று, செங்குட்டுவன் பேச முயன்றபோது, மாவட்ட நிர்வாகிகள் ஒதுங்கி நின்றனர். அவர் பேசும் போதே மைக் ஆப் ஆனது. கடுப்பான செங்குட்டுவன் அருகிலிருந்த மாவட்ட நிர்வாகிகளை திட்டினார். பொதுக்குழு உறுப்பினர் அஸ்லமை, மைக்கால் அடிக்க பாய்ந்தார். 'உங்க முதலாளி எங்கிருந்தோ சொன்னா அதைத்தான் செய்வீர்களா, மாவட்ட செயலாளர்தான் கட்சியை வளர்த்தாரா, நாங்கள் இல்லையா, நீங்கள் எல்லாம் ஜால்ரா கூட்டம் சும்மா இருங்க...' என ஆவேசமாக கூறினார்.உடனே நகர செயலாளர் நவாப், செங்குட்டுவனிடம், 'பேச வேண்டாம் விடுங்கள்' எனக்கூறி மைக்கை வாங்கி, பின்னால் கொடுத்தார். முன்னாள் எம்.பி., சுகவனமும், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளிடம், 'கட்சி நடத்துகிறீர்களா, ரசிகர் மன்றம் நடத்துகிறீர்களா போங்கய்யா...' எனக்கூறினார். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு அதிகரித்த நிலையில், மற்ற நிர்வாகிகள் அவர்களை அழைத்து சென்றனர். ஆர்ப்பாட்டமும் அந்த அளவிலேயே முடிந்தது.ஆர்ப்பாட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்த நிருபர் ஒருவரின் மொபைல் போனை, கிருஷ்ணகிரி நகராட்சி, 26 வது வார்டு கவுன்சிலர் தங்கலட்சுமியின் கணவர் பழனி பறித்தார். இதனால், அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.'மேடையில் என்ன நடந்தது'மேடையில் செங்குட்டுவன் அனைவரையும் திட்டியபோது, அங்கிருந்த நிர்வாகிகள், 'இதையெல்லாம் நேற்றே முடிவு செய்தீர்களா...' எனக்கேட்க, 'நேற்று என்ன நடந்தது என உங்களுக்கு தெரியுமா...' என, முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் அவர்களை பார்த்து சீறினார். இதனால் கவர்னரை கண்டித்து நடத்தப்பட்ட, தி.மு.க., ஆர்ப்பாட்டம், களேபரமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ