மேலும் செய்திகள்
முதல்வர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்
10-Nov-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்) கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் பா.ஜ., கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளை குறி வைத்து நீக்கும் நோக்கிலும், தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதி திட்டத்தோடு, தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆரை மேற்கொள்கிறது. இது மக்களின் வாக்குரிமையை பறிப்பதோடு, ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது.சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், இன்று (நவ.11) காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
10-Nov-2025