முதல்வரின் உழைப்பில் 50 சதவீதம் கட்சியினர் உழைத்தால் 7வது முறையாக தி.மு.க., ஆட்சி
அரூர், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமை வகித்து பேசியதாவது: உறுப்பினர் சேர்க்கையின் போது, தங்கள் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட மக்களை நிர்வாகிகள் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களை, மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலின், 24 மணி நேரமும் உழைத்து வருகிறார். அவரது உழைப்பில், 50 சதவீதம் கட்சியினர் உழைத்தால், 7வது முறையாக, தி.மு.க., ஆட்சியமைக்கும். வரும், 2026 தேர்தலில் அரூர் தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், தொகுதி பார்வையாளர் செல்லதுரை, ஒன்றிய செயலாளர்கள் தென்னரசு, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.