உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.50 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது

ரூ.1.50 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது

ஓசூர்,தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த போர்டு டைட்டானியம் காரில் சோதனை செய்த போது, 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த ஆசிப், 43, என்பவரிடம் விசாரித்த போது, பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ