| ADDED : மே 06, 2024 02:07 AM
வந்தவாசி: வந்தவாசி அருகே, குடிகார கணவனை கொலை செய்த, மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கும்பகோணத்தை சேர்ந்தவர் செந்தில் பிரபு, 42; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் மரப்பட்டறையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வந்தவாசி டவுனை சேர்ந்தவர் கவிதா, 35; இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களாக செந்தில்பிரபு மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். குடிபோதை பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு செந்தில்பிரபு வீட்டில் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுஹித்து செந்தில் பிரபுவின் அண்ணன் விக்னேஷ் பிரபு, வந்தவாசி தெற்கு போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில் பிரபு மது போதையில் நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த கவிதா, இவரின் சகோதரி சாந்தி, 37, இவரின் கணவர் சந்தோஷ், 42, தாய் காசியம்மாள், 57, ஆகியோருடன் சேர்ந்து, செந்தில் பிரபுவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்றது தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.