உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்

தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரி மற்றும் பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பியதால், உபரி நீர் வெளியேறி வருகிறது. அவதானப்பட்டி ஏரியில் நீர் வெளியேறும் பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் மீன் பிடித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, கிருஷ்ணகிரியில் லேசான மழையும், காவேரிப்பட்டணத்தில் பலத்த மழையும் பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணையில், 90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், ஓசூர், 48, பாம்பாறு அணை, 42, கிருஷ்ணகிரி, 40.20, பெனுகொண்டாபுரம், 36.20, பாரூர், 35.60, கே.ஆர்.பி., அணை, 32.80, போச்சம்பள்ளி, 32, ஊத்தங்கரை, 31.40, நெடுங்கல், 27, தேன்கனிக்கோட்டை, 22, ராயக்கோட்டை, 17, அஞ்செட்டி, 4.80, சூளகிரி, 3, சின்னாறு அணை, 2 என மொத்தம், 464 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால், பாரூர் பெரிய ஏரி முழு கொள்ளளவான, 15.60 அடியை எட்டியுள்ளது. ஏரிக்கு, 211 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து, 140 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 11.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர் திறப்பும் இல்லை.சூளகிரி சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 10.24 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர் திறப்பும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை