கல்வி, விடுதி பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி, டிச. 27-கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி, விடுதி பணியாளர்கள் சங்க, மாநில செயற்குழு மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில், காப்பாளர், சமையலர், இரவு காவலர், துாய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சமையலர்கள், இரவு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.