மேலும் செய்திகள்
டிராக்டரில் மண் கடத்தியவர் கைது
28-Apr-2025
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த சுங்கரஹள்ளியை சேர்ந்தவர் ரங்கன், 69; கூலி தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் சில்லாரஹள்ளி கோவில் திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து இரவு, 10:10 மணிக்கு கடத்தூர் --பொம்மிடி ரோட்டில் நடந்து வந்தார். மெயின் ரோட்டில் உள்ள தன் வீட்டின் அருகே வரும்போது, பின்னால் சுங்கரஹள்ளியை சேர்ந்த கொடிவேல் மகன் பூவரசன்,27, ஹீரோ ஹோண்டா பைக்கில் அதிவேகமாக வந்து மோதினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கனை, அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்
28-Apr-2025