மின் மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது
ஓசூர்: அஞ்செட்டி அருகே, மின் மீட்டர் வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய போர்மேனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, சேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மோயிஸ், 38. விவசாயி; இவர், பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற, அஞ்செட்டி மின்வாரியத்தில் விண்ணப்-பித்து, 21,000 ரூபாய் செலுத்தினார்.அதற்கு, 16,500 ரூபாய்க்கு மட்டும், ரசீது வழங்கப்பட்டு, 6 மாதம் கடந்தும், இணைப்பிற்கு மின் மீட்டர் வழங்கவில்லை. அதனால் அஞ்செட்டி மின்வாரியத்தில், போர்மேனாக பணியாற்-றிய, நொகனுாரை சேர்ந்த அலி, 45, என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு, 20,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின் மீட்டர் வழங்க முடியும் என, அவர் கூறியுள்ளார். பின் கடைசியாக, 10,000 ரூபாய் கொடுக்க அலி கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மோயிஸ், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அப்போது, போலீசார் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பிய, 10,000 ரூபாயை, நேற்று அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்த போர்மேன் அலியிடம் மோயிஸ் கொடுத்துள்ளார்.அதை அலி வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.