உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்

விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்

ஓசூர், நவ. 9-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், மரக்கட்டா, மட்ட மத்திகிரி, மலசோனை, தின்னுார், முள்பிளாட், கிரியானப்பள்ளி, ஆலஹள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.இந்நிலையில் நொகனுார் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள, மூன்று யானைகள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி, நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து, அப்பகுதியில் விவசாயி வெங்கடகிரியப்பாவின் மூன்று ஏக்கரில் சாகுபடி செய்திருந்த ராகி, சோளத்தை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன.நேற்று காலை நிலத்துக்கு சென்ற விவசாயி, பயிர்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை, தமிழக எல்லையான ஜவளகிரி வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி