மேலும் செய்திகள்
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
12-Dec-2024
தேன்கனிக்கோட்டைக்கு இடம் பெயர்ந்த யானைகள்ஓசூர், டிச. 29-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜார்க்கலட்டி அருகே முத்துார் கிராமத்தில் உள்ள தனியார் மாந்தோப்பில் நேற்று முன்தினம், 6 யானைகள் தஞ்சமடைந்திருந்தன. அவற்றை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டிய போது, சம்பத் நகர், பேவநத்தம் வழியாக சென்ற யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதுார் வனப்பகுதிக்கு சென்றன.இந்த யானைகள் எந்த நேரத்திலும் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு அல்லது ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. அதனால் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
12-Dec-2024