உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: செப்., மாத சம்பளம் வழங்கக் கோரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன்பு நேற்று மாலை, 5:30 மணிக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணி-யாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி-நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். இதில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க, மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம், கணக்காளர்கள் சங்கம், பொறியாளர்கள் சங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்-றுனர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்கள் சங்க நிர்வா-கிகள் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், செப்., மாத சம்பளத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மாநில அரசு, சம்பளம் பெற்று தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பளம் வழங்காத பட்சத்தில், நாளை (அக்.9) சென்னையில் ஆர்ப்-பாட்டம் நடத்தப்படும் என, கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ