மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளால் பரபரப்பு
05-Jun-2025
அரூர், அரூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட ஒடசல்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் ஆர்.டி.ஓ., சின்னுசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 30 குடும்பத்தினர் ஒடசல்பட்டியில் கிழக்கே வேடியப்பன் கோவிலிருந்து தென்கிழக்காக பட்டா நிலங்களில் செல்லும் அரசு வண்டிப்பாதையில் தொம்பக்கல் காப்புக்காடு வரை சென்று வந்து கொண்டிருந்தோம்.பாதையை, அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், வாகனங்களில் விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்ல முடியாததுடன், மக்கள் சென்று வர சரியான பாதை இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே, வண்டிப்பாதையை அளவீடு செய்து, பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து, ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, தாசில்தார் பெருமாள், ஆர்.ஐ., சத்தியபிரியா ஆகியோர் மேற்பார்வையில் பொக்லைன் வாகனம் மூலம், வண்டிப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
05-Jun-2025