கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இ.பி.எஸ்., சூறாவளி சுற்றுப்பயணம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று (ஆக.12) 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை, 5:00 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக, டி.பி., சாலை, காந்திசாலை வழியாக பயணித்து, அரசு மருத்துவமனை அருகே வாகனத்தில் இருந்து இறங்கி, பெருமாள் கோவில் வரை நடைபயணம் மேற்கொள்கிறார். பின்னர் பிரசார வாகனத்தில் நின்று, ரவுண்டானாவில் பிரசாரம் செய்கிறார். பின்னர், பழைய சப்-ஜெயில் சாலை, எல்.ஐ.சி., அலுவலகம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து, பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கிருந்து புறப்பட்டு, மத்துார், போச்சம்பள்ளி வழியாக ஊத்தங்கரை எம்.ஜி.ஆர்., சிலை அருகில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, ஓசூர் நெடுஞ்சாலையில் இருந்து ஊத்தங்கரை வரை கட்சிக்கொடிகள், தோரணங்கள், பேனர்களை அமைத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., செய்துள்ளார். இந்த பிரசார நிகழ்ச்சியில், கட்சியினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு, துணை பொதுச்செயலாளர் முனுசாமி, அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முனிவெங்கடப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், பர்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், காவேரிப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜமுனா கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, முன்னாள் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர் எழிலரசி சரவணன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ் ஆகியோரும் அழைப்பு விடுத்துள்ளனர்.